Sri Vellaiyappan (right) with Sri Ramagopalan

Chennai: July 1: In a shocking development, at 3.00 pm today, S.Vellaiyappan, State secretary of HINDU MUNNANI, was murdered in broad daylight at Vellore Sri S.Vellaiyappan, a full-time worker of Hindu Munnani for twenty years.  Presently, he is one of the State Secretaries of Hindu Munnani.

                                          Sri Vellaiyappan (right) with Sri Ramagopalan
Sri Vellaiyappan (right) with Sri Ramagopalan

Sri Vellaiyappan hit the headlines last week when he spearheaded the opposition to the take over of the historic Jalakanteswara (Shiva) Temple by the Hindu Religious & Charitable Endowment Board of the State Government.  The temple, had been without a deity for four centuries because of Islamic invasions.  The deity, a Shiva Linga, was installed in 1981.  Thanks to the concerted efforts of Hindus led by Hindu Munnani.  The Shivalinga was installed with huge support.  Since then, for the last 35 years, the temple properties hugely increased, courtesy, thousands of devout Hindus.  All on a sudden, the State Government wants to be the administrator of the temple, so far managed by a local committee consisting of eminent persons from the Hindu society.

RSS Condemns:

RSS State President R V Marimuthu has strongly condemned the brutal murder of the Hindu activist and pointed out that earlier BJP worker Arvind Reddy, Pugazendhi, Kaalaiyar Koil Padai ventraan Ambalam were also murdered in the same way.  Hindu Munnani activist Anand of Mettupalayam, M R Gandhi (BJP) of Nagercoil, and Hari of Koonoor and many others had been attacked and injured seriously.  The law and order in the State of Tamilnadu is questionable.  He appeals to the Chief Minister of  Tamilnadu to strongly take action against the murderers and render justice to the Hindus.

Hindu Munnani: Calls for a Bandh

Sri Ramagopalan, Founder Hindu Munnani has expressed his shock and strongly condemned the murder of full time worker Sri S.Vellaiyappan today at 3 p.m.  He is one of the State Secretaries of Tamilnadu.  Sri Ramagopalan expressed that the Chief Minister should pay special attention to the incident, as such incidents are on the increase, and wanted immediate and speedy action to be taken to find out the killers, arrest them and sentence them suitably.
As a mark of protest to the above killing, Hindu Munnani calls for a peaceful bandh tomorrow i.e., 2nd July 2013 and appeals to business establishments and shop-keepers to closure of their business establishments and shops.  Hindu Munnani also appeals to the public to light Moksha Deepam in the temples of Temples of Tamilnadu and arrange for mass prayer for the peaceful and eternal rest of the soul of Sri Vellaiappan.

ஆர்.வி.எஸ். மாரிமுத்து,
தலைவர்,
ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழகம்

கண்டன அறிக்கை

தமிழகத்தில் தேச பக்தியை வளர்ப்பதற்கும், இந்து தர்மத்தை காப்பதற்கும் பாடுபட்டு வருபவர்களை பயங்கரவாதிகள் கொடூரமாக  வெட்டி கொலை செய்வதும், கொடூர தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்து முன்னணியின் மாநில ö சயலாளர் திரு. வெள்ளையப்பன் வேலூர் பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் பயங்கரவாதிகளால் இன்று கொடூரமாக  வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். திரு.வெள்ளையப்பன் தனது வாழ்க்கையை சமுதாயப் பணிக்காக அர்பணித்தவர். தேசப்  பணிக்காக இடையாறாத பணி செய்து கொண்டிருந்தவர். அவருக்கு உரிய பாதுகாப்பு தர தமிழக காவல்துறை தவறிவிட்டது.
தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து இந்து இயக்கத் தொண்டர்கள் பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி  வருகின்றனர். வேலூரில் பாஜ கட்சியை சேர்ந் அரவிந்தரெட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். பாஜ கட்சியை சேர்ந்த புகழேந்தி,  காளையார்கோயில் படைவென்றான் அம்பலம் ஆகியோரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர். மேட்டுப் பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் ஆனந்த்,  நாகர்கோயில் பாஜ மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, குன்னூரில் இந்து  முன்னணியின் ஹரி உள்ளிட்ட பலர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் தமிழக காவல்துறையினர்  பயங்கரவாதிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருக்கும் காலங்களில் சமூகவிரோதிகளும், பயங்கரவாதிகளும் முழுமையாக  கட்டுக்குள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் பயங்கரவாதிகள் சுதந்திரமாக தங்களது ச மூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தொடர்ந்து உள்ளாகி வரும் இந்து இயங்கங்களின் தொண்டர்கள் தமிழக அரசின் மீது இன்னமும்  நம்பிக்கை வைத்து சட்டப்படியான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு உடனடியாக பயங்கரவாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்கி  தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தாயகப்பணியில்,

ஆர்.வி.எஸ். மாரிமுத்து,
தலைவர்,
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்,
தென் தமிழகம்.

*************

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
இந்து முன்னணி மாநில செயலாளர் சு. வெள்ளையப்பன் படுகொலைக்குக் காரணமானவர்கள் உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும்!
இந்து முன்னணியின் மாநில செயலாளர் சு. வெள்ளையப்பன், தமிழகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர், ஏராளமான ஊழியர்களை உருவாக்கியவர். அவர் வேலூரில் இன்று பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் அளிக்கிறது.
இந்து சமுதாய ஒருங்கிணைப்புப் பணியில் கடந்த 16 ஆண்டுகளாக இந்து முன்னணியின் முழு நேர ஊழியராக பணியாற்றியவர். சங்கரன்கோவிலைச் சேர்ந்த வெள்ளையப்பன் ஜலகண்டேஸ்வர் கோயிலில்  சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்ட புனர்நிர்மாணப்பணியில் முக்கிய பணியாற்றியவர். தொடர்ந்து அந்த ஆலயத் திருப்பணிக்கு சேவையாற்றி வந்தவர். சமீபத்தில் அறநிலையத்துறை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தை எடுத்தத்தை எதிர்த்து தொடர்ந்து போராடங்களை நடத்தி வருபவர்.
சு. வெள்ளையப்பன் பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர். சமுதாயத்திற்கு ஒரு பிரச்னை என்றால் அங்கு இந்து சமுதாயத்தின் பிரதிநிதியாக முதல் நபராக பங்கேற்பவர். நியாயத்தை எடுத்துக்கூறுவார்.
அத்தகைய நல்ல உள்ளம் படைத்தவரை கொடூர மனம்படைத்தவர்கள் கொன்று குவித்துள்ளார்கள். வேலூரில் தொடர்ந்து படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன. தமிழகத்தில் அரசியலைச் சார்ந்தவர்கள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் நாள்தோறும் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழகம் கொலை களமாக மாறி வருவதை எண்ணிப் பார்க்கையில் கவலை அளிக்கிறது. அரசு இனி கொலைகள் நடக்காது என்று உறுதி அளிக்கும் வகையில் அதன் செயல்பாடு இருக்க வேண்டும். இல்லையேல் நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் எதவும் நடக்கும் என்பது அரசாட்சிக்கு அழகல்ல. தமிழக காவல்துறை புலனாய்வுக்குத் தெரியாமல்  இது நடந்திருக்க முடியாது, அல்லது புலானய்வுத் துறை செயலிழந்துவிட்டதா? காவல்துறை புலனாய்வுத் துறையின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்துகிறதா? காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இந்தப் படுகொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து, உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும்.
இந்தப் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை அமைதியான முறையிலும், ஜனநாயக வழியிலும் நமது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் கடையடைப்புக்கு இந்து முன்னணி அழைப்பு விடுக்கிறது. இந்து முன்னணியின் வேண்டுகோளை ஏற்று வணிகர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் கடையடைப்புக்கு ஆதரவு தர கேட்டுக்கொள்கிறோம்.
வெள்ளையப்பனின் ஆன்மா நற்கதியடை தமிழகத்தின் அனைத்து ஆலயங்களிலும் மோட்ச தீபம் ஏற்றி கூட்டுப் பிரார்த்தனை செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.